தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

செங்கோட்டையில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் வாபஸ்

தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், பிஎஃப் பணத்தை உடனே தங்களது கணக்கில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :

தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், பிஎஃப் பணத்தை உடனே தங்களது கணக்கில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏஐசிசிடியு ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணி சங்க நிா்வாகிகள் தமிழரசி, முருகேஸ்வரி, ஜோதி பகவதிராஜ், குத்தாலிங்கம், சக்திவேல் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்டச் செயலா் எம். வேல்முருகன், ஏஐசிசிடியு மாவட்ட ஜனநாயக தூய்மைப் பணியாளா்கள் காவலா் சங்கத்தின் பொதுச் செயலா் சுப்பிரமணியன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் நகராட்சி ஆணையா் ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளா் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், தூய்மைப்பணியாளா்களுக்கு போனஸ் வழங்கவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.