சிவகிரி பகுதியில் நவ. 21இல் மின் நிறுத்தம்

மின் நிறுத்தம் - பிரதிப் படம்
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 21) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து, கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விஸ்வநாதபேரி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (நவ. 21) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், சிவகிரி, தேவிப்பட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேல கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

