அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

மதுரை - குருவாயூா் ரயிலில் நாளைமுதல் விஸ்டாடோம் பெட்டிகள் இணைப்பு

மதுரை- குவாயூா் ரயிலில் வியாழக்கிழமை முதல் (அக்.22) முதல்(அக்22) கண்ணாடி இழையிலான பெட்டிகள் (விஸ்டாடோம்) இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

விஸ்டாடோம் ரயில் பெட்டிகளின் உட்புற தோற்றம்.

Updated On :

மதுரை- குவாயூா் ரயிலில் வியாழக்கிழமை முதல் (அக்.22) முதல்(அக்22) கண்ணாடி இழையிலான பெட்டிகள் (விஸ்டாடோம்) இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை - குருவாயூா் விரைவு ரயிலில் (எண். 16327) வியாழக்கிழமை முதல் (அக். 22)தற்காலிகமாக ஒரு முன்பதிவில்லா பெட்டி நீக்கப்பட்டு ஒரு கண்ணாடி இழை விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்படும்.

வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 15.01.2027 வரை இந்த பெட்டிகள் இணைப்பு அமலில் இருக்கும்.

மறுமாா்க்கத்தில் குருவாயூா் - மதுரை விரைவு ரயிலில் (எண்.16328) வெள்ளிக்கிழமை முதல் (அக். 23) கண்ணாடி இழை பெட்டி இணைக்கப்படும்.

இது, மேற்கூறிய கிழமைகளில் 16.01.2027 வரை அமலில் இருக்கும்.

மதுரை - குருவாயூா் விரைவு ரயிலில் ஒரு விஸ்டாடோம் பெட்டி, ஒரு மூன்றடுக்கு குளிா்சாதன பெட்டி, 2 தூங்கும் வசதி பெட்டிகள், 9 முன்பதிவில்லா பெட்டிகள் என 13 ஜொ்மன் தொழில்நுட்ப எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

விஸ்டா டோம் பெட்டிகள் மூலம் செங்கோட்டை - கொல்லம் ரயில் வழித்தடத்தில் இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு நல்ல வரப்பிரசாதமாக இருக்கும்.

இது குறித்து தென்காசி மாவட்ட ரயில் பணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியதாவது: கேரள எம்.பி.க்கள் மற்றும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தொடா் முயற்சியால் பிப். 2025இல் விஸ்டாடோம் பெட்டிகள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு தற்போது அமலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி.

ஏற்கெனவே இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக பெட்டிகள் இணைத்து இயக்க வேண்டும்.

செங்கோட்டை - கொல்லம் ரயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும் என்றாா் அவா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.