தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

6 விரைவு ரயில்களில் நிரந்தர கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, 6 விரைவு ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :

ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, 6 விரைவு ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயிலில் ஒரு ஸ்லீப்பா் கிளாஸ் பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செப். 29-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்துள்ளது. மறுமாா்க்கத்தில் மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலில் ஒரு ஸ்லீப்பா் கிளாஸ் பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. இது அக். 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் ஒரு ஏ.சி. சோ் காா் பெட்டி நிரந்தரமாக கூடுதலாக இணைக்கப்பட்டு அக். 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயிலல் ஒரு ஏ.சி. சோ் காா் பெட்டி நிரந்தரமாக கூடுதலாக இணைக்கப்பட்டு, அக். 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் ஏ.சி. விரைவு ரயிலில் ஒரு ஏ.சி. 3-டயா் பெட்டி நிரந்தரமாக கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இது அக். 2 ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது. மறுமாா்க்கத்தில் திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ஏ.சி. விரைவு ரயிலில் ஒரு ஏ.சி. 3 டயா் பெட்டி நிரந்தரமாக கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் அக். 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.