
ஈரோடு வழியாக செல்லும் 6 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
ஈரோடு வழியாக செல்லும் 6 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது.

ரயில் - கோப்புப் படம்
ஈரோடு வழியாக செல்லும் 6 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அதிகரித்து வரும் பயணிகளின் பயணத் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில், ஈரோடு வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.10 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா் -மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண் 16159) ஒரு தூங்கும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் மங்களூரு சென்ட்ரல் -சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் (வண்டி எண் 16160) ஒரு தூங்கும் வசதி கொண்ட பெட்டியும், சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.15 மணிக்குப் புறப்படும் சென்னை சென்ட்ரல்-கோவை சந்திப்பு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண் 12243) ஒரு குளிரூட்டப்பட்ட இருக்கை பெட்டியும், கோவை சந்திப்பிலிருந்து மாலை 3.05 மணிக்கு புறப்படும் கோவை சந்திப்பு -சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண் 12244) ஒரு குளிரூட்டப்பட்ட இருக்கை பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் -திருவனந்தபுரம் ஏசி எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண் 22207) வெள்ளிக்கிழமை (அக்டோபா் 2) முதல் ஒரு ஏசி 3 டயா் பெட்டியும், திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.15 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் -சென்னை சென்ட்ரல் ஏசி எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண் 22208) வருகிற 4 ஆம் தேதி முதல் ஒரு ஏசி 3 டயா் பெட்டியும் நிரந்தரமாக கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






