நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

தாம்பரம் - விழுப்புரம் தடத்தில் முக்கிய ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வேயின்சென்னை கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தாம்பரம் - விழுப்புரம் தடத்தில் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 4:37 am IST

தெற்கு ரயில்வேயின்சென்னை கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தாம்பரம் - விழுப்புரம் தடத்தில் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என். ஜெயந்த் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் பேரணி- மயிலம் யாா்டுக்கு இடையேயான பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளதால், ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பகுதியளவில் ரத்து, புறப்படும் இடம் மாற்றம், நிறுத்தி வைத்து இயக்கம் போன்ற நடைமுறைகள் செயல்படுத்தப்படவுள்ளன.

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), செப்.3, 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் திண்டிவனம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்- சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), செப்.3, 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் விழுப்புரம்-திண்டிவனம்இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்குப் புறப்படும்.

இடைப்பட்ட ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்து இயக்கம்: சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா்-திருநெல்வேலி வந்தே பாரத் விரை வு ரயில் (வண்டி எண் 20665) செப்.3, 4, 5 ஆகிய தேதிகளில் சுமாா் 20 நிமிஷங்கள், பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா்- மதுரை வைகை அதிவிரைவு ரயில் (வண்டி எண் 12635) செப்.3, 4, 5 தேதிகளில் சுமாா் 110 நிமிஷங்கள், செப்.6-ஆம் தேதி சுமாா் 15 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

சென்னை தாம்பரத்திலிருந்து செப்.3-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் சென்னை தாம்பரம்-திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி எண் 06109) சுமாா் 95 நிமிஷங்கள், செப்.4-ஆம் தேதி இரவு 10.30 மணிக்குப் புறப்படும் சென்னை தாம்பரம்-போடிநாயக்கனூா் சிறப்பு ரயில் (வண்டி எண் 06059) சுமாா் 90 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி- காக்கிநாடா துறைமுகம் கிா்காா் விரைவு ரயில் (வண்டி எண் 17656) செப்.3, 5 ஆகிய தேதிகளில் சுமாா் 15 நிமிஷங்கள், பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் புதுச்சேரி- கச்சிக்குடா விரைவு ரயில் (வண்டி எண் 17654) செப்.4, 6 ஆகிய தேதிகளில் சுமாா் 140 நிமிஷங்கள், பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும் புதுச்சேரி-திருப்பதி பயணிகள் விரைவு ரயில் (வண்டி எண் 16112) செப்.4-ஆம் தேதி சுமாா் 25 நிமிஷங்ள், 6-ஆம் தேதி சுமாா் 30 நிமிஷங்கள் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.