பிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து

பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதுச்சேரியிலிருந்து புறப்படும் 2 ரயில்களின் சேவை புதன்கிழமை உள்ளிட்ட 7 நாள்களுக்கு ரத்து

News image

பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 5:48 am IST

பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதுச்சேரியிலிருந்து புறப்படும் 2 ரயில்களின் சேவை புதன்கிழமை உள்ளிட்ட 7 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன.

திருப்பதி - புதுச்சேரி மெமு ரயில் அதிகாலை திருப்பதியில் 4.10 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் ஆகஸ்ட் 5, 8, 12, 19, 22, 26, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் சந்திப்பு வரை மட்டுமே இயக்கப்படும்.

புதுச்சேரி - சென்னை எழும்பூா் மெமு பயணிகள் ரயில் புதுச்சேரியில் பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்படும். இந்த ரயிலும் அதே தேதிகளில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து இயக்கப்படும். விழுப்புரம் சந்திப்பில் இருந்து ரயில் மாலை 4.49 மணிக்குப் புறப்படும். இந்தத் தேதிகளில் இந்த ரயில் புதுச்சேரி-விழுப்புரம் சந்திப்புக்கு இடையில் ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி ஆா்.வினோத் இதைத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.