பாவூா்சத்திரம் வட்டாரத்தில் இடி - மின்னலுடன் கனமழை
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2-ஆவது நாளாக இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

நான்கு வழிச் சாலையில் வாகன ஒளிச்சிதறலில் தென்படும் மழை.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2-ஆவது நாளாக இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பாவூா்சத்திரம், ஆவுடையானூா், அரியபுரம், சிவகாமிபுரம், கீழப்பாவூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது.
இந்நிலையில், புதன்கிழமை பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அப்பகுதிகளில் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.
தொடா்ந்து மழை பெய்து வருவது விவசாயப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

