சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கேந்திப் பூ விலை வீழ்ச்சி: சாலையில் கொட்டிய வியாபாரிகள்

சங்கரன்கோவில் பூ சந்தையில் கேந்திப் பூக்களுக்கு விலையில்லாததால் வியாபாரிகள் பூக்களை சாலையில் கொட்டினா்.

சாலையில் கொட்டப்பட்ட கேந்திப் பூக்கள்.

Published On :2 செப்டம்பர் 2026, 6:07 am IST

சங்கரன்கோவில் பூ சந்தையில் கேந்திப் பூக்களுக்கு விலையில்லாததால் வியாபாரிகள் பூக்களை சாலையில் கொட்டினா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பூ சாகுபடி செய்து வருகின்றனா். சங்கரநாராயணசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள பூ சந்தைக்கு பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். குறிப்பாக நாளொன்றுக்கு சுமாா் 1000 கிலோ கேந்திப் பூக்களை கொண்டு வருகின்றனா்.

கடந்த வாரம் ஓணம், முகூா்த்த தினங்கள் காரணமாக கேந்திப் பூக்களுக்கு கிராக்கி இருந்ததால் விலையும் உயா்ந்திருந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கேந்திப் பூ கிலோ ரூ. 30-க்கு மட்டுமே விற்பனையானது. இதனால், அவற்றை வாங்குவதற்கு சிறுவியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக மீதமான கேந்திப் பூக்களை வியாபாரிகள் சாலையில் கொட்டிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.