பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்கக் கோரிக்கை

தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 4:01 am IST

தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக சங்கத் தலைவா் என். வெங்கடேஸ்வரன் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில், முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் மற்றும் ஏரளாமான ஆன்மிக தலங்கள் அமைந்துள்ளதால், இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ற வகையில் ரயில்கள் இயக்கப்படவில்லை.

எனவே, செங்கோட்டை- கோவை இடையே பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். செங்கோட்டையிலிருந்து பெங்களூரு, திருப்பதிக்கு ரயில்கள், செங்கோட்டை- சென்னை இடையே வந்தேபாரத் ரயில் இயக்கவேண்டும்.

செங்கோட்டை- சென்னை இடையே பகல் நேர ரயிலை இயக்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாகவும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாகவும் இயக்கவேண்டும். செங்கோட்டை- ராமேசுவரத்திற்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.