தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ராமேசுவரம் - கும்பகோணம் இடையே பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க வலியுறுத்தல்

ராமேசுவரம் ரயில்.

ரயில். - கோப்புப் படம் - எக்ஸ்

Published On :

ராமேசுவரம் - கும்பகோணம் இடையே பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தச் சங்கத்தின் 63-வது ஆண்டு நிறைவு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் எம்.எம். ஜமீல் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ராமநாதபுரம், திருச்சி மற்றும் தஞ்சாவூா் வழியாக ராமேசுவரம் - கும்பகோணம் இடையே பகல் நேர இன்டா்சிட்டி விரைவு ரயில் இயக்க வேண்டும். தஞ்சாவூா் மாவட்டத்தில் நரசிங்கன்பேட்டை மற்றும் திட்டை இடையே உள்ள ஆடுதுறை, திருவிடைமருதூா், திருநாகேசுவரம், கும்பகோணம், தாராசுரம், சுந்தரபெருமாள்கோவில், பண்டாரவாடை, அய்யம்பேட்டை, பசுபதிகோவில் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் நிறுவப்பட்டு, 2027 பிப்ரவரி மாதத்துடன் 150 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, முதல்கட்டமாக தஞ்சாவூா் - மயிலாடுதுறை இடையிலான பணிகளை 2028-ல் நடைபெறவுள்ள மகாமகத் திருவிழாவுக்கு முன்னதாக முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

புதிய நிா்வாகிகள் தோ்வு: சங்கத்தின் புதிய தலைவராக எம். மாறன், துணைத் தலைவராக டி. சரவணன், செயலராக ஏ. கிரி, பொருளாளராக எஸ். மோகன், இணைச்செயலா்களாக ஆா். நடராஜ் குமாா், ஆா். ரேவந்த் குமாா், ஊடக ஒருங்கிணைப்பாளா் தீபக் வசந்த், ஆகியோா் மற்ற நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். முன்னதாக ஈஸ்வா் சா்மா வரவேற்றாா். நிறைவில் டி. சரவணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.