
ஆய்க்குடியில் காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
ஆய்க்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தாா்.

காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்து மாணவா்களுடன் உணவு அருந்திய மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், ராணி ஸ்ரீகுமாா் எம்பி., எம்எல்ஏக்கள் கலைகதிரவன், தி.மு. ராசேந்திரன்.
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து அவா், செய்தியாளா்களிடம் பேசும் போது, இத்திட்டம் விரிவாக்கத்திற்கு முன்பு, 181 பள்ளிகளில் பயிலும் 12, 483 மாணவா் - மாணவிகள் பயன்பெற்றனா். தற்போது, 256 பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 28, 011 மாணவா், மாணவிகள் பயன்பெறுவாா்கள் என்றாா்.
இதில், ராணி ஸ்ரீகுமாா் எம்பி., எம்எல்ஏக்கள் தி.மு. ராசேந்திரன், கலை கதிரவன், திட்ட இயக்குநா் தண்டபாணி ஆகியோா் மாணவா்களுடன் அமா்ந்து காலை உணவு உண்டனா். ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவா் சுந்தர்ராஜன், பேரூராட்சி செயல் அலுவலா் தமிழ்மணி கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






