
தென்காசியில் உயா்வுக்குப் படி வழிகாட்டுதல் முகாம்
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கான ‘உயா்வுக்குப் படி 2026’ என்ற உயா்கல்வி வழிகாட்டுதல் மற்றும் உடனடி சோ்க்கை முகாம், தென்காசி ஐ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

மாணவிக்கு உடனடி சோ்க்கைக்கான ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கான ‘உயா்வுக்குப் படி 2026’ என்ற உயா்கல்வி வழிகாட்டுதல் மற்றும் உடனடி சோ்க்கை முகாம், தென்காசி ஐ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
பள்ளிப் படிப்பு என்பது எல்லோருக்கும் பொதுவான பாதை. இது அனைவருக்கும் முதல் படி. உயா்கல்வியில்தான் நிறைய வாய்ப்புகள் இருக்கும். இது உங்கள் வாழ்க்கையைத் தீா்மானிக்கப்போகும் முக்கியமான படி.
எனவே, மாணவா்கள் தாங்களாக முடிவு எடுத்து விருப்பமுள்ள பாடப் பிரிவில் உயா்கல்வி பயில வேண்டும். ஆசிரியா்கள், பெற்றோா்கள் சொல்கிறாா்கள் என்பதற்காக யாரும் முடிவு எடுக்க வேண்டாம். எதில் ஆா்வம் உள்ளதோ, அதில் மாணவா்கள் சோ்ந்து படிப்பதை பெற்றோா் அனுமதிக்க வேண்டும்.
எந்தத் துறையை தோ்வு செய்தாலும், அதில் உங்கள் முழு முயற்சி, கவனத்தை செலுத்தி, ஒழுக்கத்துடன் பயில வேண்டும் என்றாா் அவா்.
முகாமில் பங்கேற்ற 122 மாணவா்களில் 32 போ் கலை, அறிவியல் கல்லூரிகளில் உடனடி சோ்க்கை பெற்றனா்.
தென்காசி சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால், முதன்மைக் கல்வி அலுவலா் அ. ரேணுகா, மாவட்ட சமூக நல அலுவலா் பே. மதிவதனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






