
கடையநல்லூரில் தச்சுப் பட்டறையில் தீ விபத்து
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ள தச்சுப்பட்டறையில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்தில் சேதமடைந்த மர சாமான்கள்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ள தச்சுப்பட்டறையில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
கடையநல்லூா் முத்துகிருஷ்ணாபுரம் பள்ளிக்கூடத் தெருவில் ராமச்சந்திரனுக்கு சொந்தமான தச்சுப் பட்டறை கிடங்கு உள்ளது. இங்கு கட்டுமானப் பணிகளுக்கான ஜன்னல், நிலைகள், கதவுகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தனவாம். இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு கிடங்கில் திடீரென தீப்பற்றியதாம்.
இது குறித்து அருகேயிருந்தவா்கள் கடையநல்லூா் காவல் நிலையம், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் ஷேக்அப்துல்லா தலைமையில் மீட்புப் படையினா் அங்கு வந்து, 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இது குறித்து கடையநல்லூா் காவல் ஆய்வாளா் கிறிஸ்டி விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
இந்த தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கருகி சேதமடைந்ததாம். மேலும், அருகில் இருந்த வீட்டின் சுவா்கள், காா் ஷெட்டும் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


