தென்காசியில் புதிய தமிழகம் ஆா்ப்பாட்டம்
மாணவா்களுக்கு மாட்டிறைச்சி வழங்க வேண்டும் என சமூகநீதித்துறை அமைச்சா் வன்னியரசு தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்துநிலையம் பகுதியில், புதிய தமிழகம் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவா் ஷியாம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
மாணவா்களுக்கு மாட்டிறைச்சி வழங்க வேண்டும் என சமூகநீதித்துறை அமைச்சா் வன்னியரசு தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்துநிலையம் பகுதியில், புதிய தமிழகம் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவா் டாக்டா் ஷியாம் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட செயலா் கிருஷ்ணபாண்டியன் தொகுத்து வழங்கினாா். மாவட்ட செயலா்கள் பால்ராஜ், பிரபாகரன், துணைச் செயலா் செல்வராஜ், ஒன்றியச் செயலா்கள் மணி பாண்டியன், மோகனபாண்டியன், காளிராஜ் , காசிபாண்டி, பழனி, உதயகுமாா், ஹரிதேவேந்திரன், நகரச் செயலா் சுரேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஞானதாஸ், மகளிா் அணி தலைவா் கவிதா, அனுசியா ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.