வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வீடுகள், வணிக வளாகங்களுக்காக விலைபோகும் விளைநிலங்கள்!

அம்பாசமுத்திரம், டிச. 8:    அண்மைக் காலமாக விளைநிலங்களில் குடியிருப்பு வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால், உணவு உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கருதப்படுகிறது.  

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:15 am

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரம், டிச. 8:    அண்மைக் காலமாக விளைநிலங்களில் குடியிருப்பு வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால், உணவு உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கருதப்படுகிறது.

  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயத் தொழில் பிரதானமாக உள்ளது. எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேலென வாழை மற்றும் நெற்பயிர்கள் காட்சியளிக்கின்றன.  

       இவ்விரு  மாவட்டங்களில் தாமிரபரணி வடிநில பாசனத்தில் விவசாயம் செய்யப்

படும் 2.55 லட்சம் ஏக்கர் நிலத்தில் 86 சதவீத பாசனப் பரப்பு இருபோக பாசனம் கொண்டவையாகும். எனவே, தாமிரபரணி பாசனத்தில் உணவு உற்பத்தி பெருமளவில் செய்யப்படுகிறது.

  இருப்பினும், அண்மைக்காலமாக விளைநிலங்களில் குடியிருப்பு வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்படுவது அதிகரித்து வருகிறது. போக்குவரத்து வசதிக்காக பெருநகரங்களில் வயல்வெளியில் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.

  அவ்வாறு உருவாக்கப்படும் புறவழிச்சாலையை ஒட்டியுள்ள விளைநிலங்களில் வணிக நிறுவனங்கள் கட்டுவதும் அதிகரித்து வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகையும் இதற்கு ஒரு காரணம்.

  திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், வி.கே.புரம் பகுதிகளில் இப்படி விளைநிலங்கள் வீடுகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறிவருவது அதிகரித்துள்ளது.

  1995ம் ஆண்டுக்கு முன்புவரை விவசாய நிலங்களில் கட்டடங்கள் கட்டுவதற்கு வேளாண் துறையின் அனுமதியைப் பெற வேண்டும்.

  10 ஆண்டுகள் விவசாயம் செய்யப்படாமல் நிலம் தரிசாக மாறியிருந்தால், கிராம நிர்வாக அலுவலரின் சான்று பெற்று வேளாண் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  வேளாண் துறையினர் அந்த நிலத்தை ஆய்வு செய்து இந்நிலம் விவசாயம் செய்ய உகந்ததல்ல என சான்று வழங்கிய பின்னரே அங்கு கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படும்.

  மேலும், விளைநிலம் 10 சென்டுக்கு அதிகமாக இருந்தால் சென்னை வேளாண் துறை இயக்குநர் அலுவலகம் அனுமதி வழங்கினால் மட்டுமே விவசாய நிலங்களில் கட்டடங்கள் கட்ட அனுமதிக்கப்படும்.

  ஆனால், விளைநிலங்களில் கட்டடங்கள் கட்டுவதற்கு வேளாண் துறையின் அனுமதி தேவையில்லை என அரசு விதி தளர்த்தப்பட்ட காரணத்தால், வருவாய்த்துறை அதிகாரிகளின் சான்றை எளிதில் பெற்று விவசாய நிலங்களில் கட்டடங்கள் கட்டுவது அதிகரித்துவிட்டது.

  கடந்த 5 ஆண்டுகளில் தாமிரபரணி பாசனத்தில் விளைநிலங்களில் கட்டடங்கள் கட்டுவது 2 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் உணவு, தானிய உற்பத்தி பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் சாலையோரமாக உள்ள விளைநிலங்கள், குளங்களை தேர்வு செய்து வியாபார நோக்கத்தில் அங்கு புதிய நகரங்களை உருவாக்க முனைவதால் விளைநிலங்கள் பறிபோய் வருகின்றன.

இவ்விரு மாவட்டங்களில் இதுபோன்ற பல நகரங்கள் உருவாக்கப்பட்டு வருவதால், விவசாய நிலங்களில் கட்டடங்கள் கட்டுவது என்பது எளிதாகிவிட்டது.

  எனவே, அரசு தடை விதித்தால் மட்டுமே விவசாய நிலங்களைப் பாதுகாக்க முடியும். உணவு, தானிய உற்பத்தியை உறுதி செய்ய முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.