ஆற்றில் மூழ்கும் குடிநீர்த் திட்டங்கள்!
அம்பாசமுத்திரம், மே 27: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உறைக் கிணறுகள் அமைந்துள்ள பகுதியில் அதிக அளவில் மணல் அள்ளப்படுவதால் குடிநீர்த் திட்டங்கள் சேதமடைந்து வருகின


அம்பாசமுத்திரம், மே 27: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உறைக் கிணறுகள் அமைந்துள்ள பகுதியில் அதிக அளவில் மணல் அள்ளப்படுவதால் குடிநீர்த் திட்டங்கள் சேதமடைந்து வருகின்றன.
இம் மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, கருணை ஆறு, ராமநதி ஆறுகளில் குடிநீர்த் திட்டம் அமைத்து பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களுக்காக ஆறுகளில் உறைக்கிணறுகள் அமைத்து குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தாமிரபரணி ஆற்றில் சேரன்மகாதேவியில் இருந்து பணகுடி, திசையன்விளை கூட்டுக் குடிநீர்த் திட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஊர்க்காடு கிராமத்தில் இருந்து தென்காசி, செங்கோட்டை, அச்சன்புதூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்பட பல்வேறு குடிநீர்த் திட்டங்கள் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவை நிறைவு செய்யப்படுகிறது.
தாமிரபரணி ஆறு, கருணை ஆறு, ராமநதியில் அரசு மணல் குவாரி அமைத்து மணல் அள்ளப்ட்டது. மேலும், ஆற்றுப்படுகையில் இருந்து பெருமளவில் அனுமதியின்றி டிராக்டர், மினி லாரி, மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
ஆற்றுப்படுகையில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளுவதை வருவாய்த்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் மாட்டு வண்டிகளில் எடுத்து வந்து மணலை சேமித்து வைத்து பின்னர் லாரி, டிராக்டரில் கடத்தப்படுகிறது.
ஆறுகளில் குடிநீர்த் திட்ட உறைக் கிணறுகள் அமைந்துள்ள பகுதியில் இருந்து பெருமளவில் மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், உறைக் கிணறுகள் பலமிழந்து வருகின்றன. பலமிழக்கும் உறைக் கிணறுகள் மழைக் காலங்களில் முற்றிலும் சேதமடைந்து குடிநீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
அண்மையில் அம்பாசமுத்திரம் அருகே கருணை ஆற்றில் கட்டப்பட்டிருந்த உறைக் கிணறுகள் சேதமடைந்து பல கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை உருவானது. எனவே, ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள குடிநீர்த் திட்ட உறைக் கிணறுகளைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
யார் பாதுகாப்பது? அரசுத் திட்டங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் உள்ளது. ஆற்றுப்படுகையில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளுவதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குடிநீர்த் திட்டங்களைப் பாதுகாக்க முடியும்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆற்றுப்படுகையில் குடிநீர்த் திட்ட உறைக் கிணறுகள் அமைந்துள்ள பகுதியில் இருந்து மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...