மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நெல்லையில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தெற்கு ரயில்வே அண்ணா யூனியன், அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ரயில்வே ஊழியர் சங்கம் ஆகியவை சார்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 அக்டோபர் 2014, 12:41 pm

தெற்கு ரயில்வே அண்ணா யூனியன், அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ரயில்வே ஊழியர் சங்கம் ஆகியவை சார்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரயில்வே குரூப் டி தேர்வுக்கு விண்ணப்பித்த 70 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களை நிராகரித்ததைக் கண்டிப்பது, மத்திய அரசின் அரசாணையை பின்பற்றி அனைவரையும் ரயில்வே குரூப்-டி தேர்வு எழுத அனுமதிக்கக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு ரயில்வே அண்ணா தொழிற்சங்க மதுரைக் கோட்டத் தலைவர் சி.வெயில்முத்து தலைமை வகித்தார். கிளைச்செயலர் டி.எஸ்.மணி முன்னிலை வகித்தார். பி.செல்லையா, ஏ.சிவபெருமாள், பி.பொன்னுச்சாமி, சாமிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ரயில்வே ஊழியர் சங்க கிளைத் தலைவர் கே.பாலாஜி நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் மட்டுமன்றி ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள்,  ரயில்வே தேர்வுகளுக்காக பயிற்சி நிலையங்களில் பயின்று வருவோர் என 80-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.