5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடிதிண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தல்

பேட்டையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமனம் செய்யவும், பொதுமக்கள் நலன் கருதி மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :

பேட்டையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமனம் செய்யவும், பொதுமக்கள் நலன் கருதி மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் அளித்த மனு:

பேட்டையில் இயங்கி வரும் காயிதே மில்லத் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை காணப்படுகிறது. பிரசவ வார்டு இருந்தபோதிலும், மருத்துவர், சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அங்குள்ள பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் நலன் கருதி கூடுதலாக மருத்துவர்கள், பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.

கோரிக்கை மனு: மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அளித்த மனு: மேலப்பாளையம் 36ஆவது வார்டு வள்ளுவர் தெருவில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் முகாமிட்டு ஆலோசனை நடத்தினர். எனினும் அத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. எனவே, நலிந்த மக்களின் நலனை கருத்தில்கொண்டு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர்கள் மனு: நடுக்கல்லூரில் இயங்கி வரும் தனியார் காகித ஆலையில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். திடீரென அந்த ஆலையில் உற்பத்தி நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.