3 ஆயிரம் ஏக்கரில் கருகும் வாழை, நெற்பயிர்: விவசாயிகள் புகார்
கன்னடியன் கால்வாய் பாசனத்தில் கோபாலசமுத்திரம், மேலச்செவல் பகுதியில் கடைமடைக்கு தண்ணீர் எட்டாததால், 3 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழை, நெற்பயிர் கருகி வருவதாக புகார் தெரிவித்தும், கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தியும்திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

இக்கால்வாய் பாசனத்தில் கோபாலசமுத்திரம், மேலச்செவல், பிரான்சேரி, சுப்பிரமணியபுரம், மறுகால் பகுதியில் நிகழ் பருவத்தில் வாழை, நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பாசனத்துக்கு சுழற்சி முறையில் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படுவதால் மேற்கூறிய இரு பகுதி குளங்களுக்குத் தண்ணீர் எட்டுவதில்லை.
பிரான்சேரி குளத்திலிருந்து செங்குளத்திற்கு 10 அடி அகலத்தில் 600 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாய் நாளடைவில் தூர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.