தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு: குமரியிலிருந்து தில்லிக்கு சைக்கிள் பயணம்
தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுக்காக கன்னியாகுமரி முதல் தில்லி வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் இளைஞருக்கு திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுக்காக கன்னியாகுமரி முதல் தில்லி வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் இளைஞருக்கு திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம், பத்தேகர் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக்குமார் சர்மா (28). தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கன்னியாகுமரி முதல் தில்லி வரை சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார். திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவருக்கு ஜூட்டாராம் பட்டேல் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பயணம் குறித்து அபிஷேக்குமார் சர்மா கூறியதாவது: தூய்மை இந்தியா திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கினேன். முதல்கட்டமாக கான்பூர்-காஷ்மீர் வரையும், 2 ஆம் கட்டமாக காஷ்மீர்-ஆமதாபாத் வரையும், 3 ஆம் கட்டமாக ஆமதாபாத்-கன்னியாகுமரி வரையும் சைக்கிள் பயணம் செய்துள்ளேன்.
நான்காவது கட்டமாக கன்னியாகுமரி-தில்லி வரையிலான எனது பயணத்தை கடந்த 23 ஆம் தேதி தொடங்கினேன். பிரதமர் அலுவலகம் வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.
இதுவரை 16 மாநிலங்கள் வழியாக பயணித்துள்ளேன். 14 ஆயிரத்து 200 கி.மீ. தொலைவை சைக்கிளில் கடந்துள்ளேன்.
அடுத்தகட்டமாக அமெரிக்காவிலும் சைக்கிள் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

