தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இந்தியன் வங்கி கடன் திட்ட விளக்க முகாம்

இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டல அலுவலகம் சார்பில் கடன் திட்ட விளக்க முகாம் திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:53 am

DIN

இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டல அலுவலகம் சார்பில் கடன் திட்ட விளக்க முகாம் திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு மண்டல மேலாளர் வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் உருவாகிவிட்டன. இதனால் அனைத்து தரப்பினரும் வாகனங்களை வாங்கி வருகிறார்கள். அவ்வாறு வருவோருக்கு கடனுதவி திட்டங்களை இந்தியன் வங்கி சிறப்பாக செய்து வருகிறது. வாகன விற்பனையாளர்களுக்கும் சிறப்பு ஊக்க ஊதிய தொகைகள் வழங்கப்படுகின்றன. வணிகத்தைப் பெருக்கவும், எளிய முறையில் கடனுதவி பெறவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களிடம் வாகன விற்பனையாளர்கள் எடுத்துச் சொல்லி வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த இந்தியன் வங்கி துணைபுரியும் என்றார் அவர். முகாமில் மண்டல துணை மேலாளர் டி.சுதாகரன் மற்றும் அதிகாரிகள், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இருசக்கர, நான்குசக்கர வாகன விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.