சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி

திருநெல்வேலியில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலியில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையத்தின் சார்பில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கத்தில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருமுறைகளில் சைவ சித்தாந்த கருத்துகள் என்ற தலைப்பில் பேராசிரியர் மீ.முருகலிங்கம் சொற்பொழிவாற்றினார். மாணவிகள் பரமேஸ்வரி, பேச்சியம்மாள், சுப்பம்மாள் ஆகியோர் மாகேஸ்வர பூஜை நடத்தினர். பயிற்சி வகுப்பில் 60 பேர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அமைப்பாளர் கு.முதுதுசுவாமி தலைமையில் முன்னாள் மாணவர்கள் ராம்குமார், வள்ளிநாயகம், முருகேசன், கணேசன் ஆகியோர் செய்திருந்தனர். அடுத்தப்பயிற்சி வகுப்பு டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com