வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

பல்கலைக்கழக மாணவர்களுக்கான  தடகளம்: இன்று தொடக்கம்

பல்கலைக்கழகங்கங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை (ஏப். 5) தொடங்க உள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:47 am IST

பல்கலைக்கழகங்கங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை (ஏப். 5) தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: இப் பல்கலைக்கழகமும்,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நடத்தும் தமிழக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஏப். 5, 6) பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 300 வீரர் மற்றும் வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 
போட்டிகளை திருநெல்வேலி சரக காவல்துணைத் தலைவர் கபில்குமார் சராட்கர் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். துணைவேந்தர் கி.பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். வெள்ளிக்கிழமை (ஏப். 6) நடைபெறும் நிறைவு விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் பரிசுகளை வழங்க உள்ளனர். ஏற்பாடுகளை பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறையினர் செய்து வருகிறார்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.