தென்காசியில் கின்னஸ் சாதனை முயற்சியாக 65ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் மிகப்பெரிய ஓவியம் வரையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பரதாலயா கல்சுரல் அகாதெமி சார்பில் மிகப்பெரிய ஓவியம் வரையும் நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது. அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் ஜி.சந்திரசேகரன் தலைமை வகித்தார். ரவிராஜ் பைன் கலைக் கல்லூரி முதல்வர் ரவிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
போட்டியில், திருவண்ணாமலை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி,திருநெல்வேலி, நாமக்கல், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பள்ளி,மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகள் 997 பேர் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர்.
இயற்கையை பாதுகாப்போம் என்ற கருத்தை மையமாக கொண்டு வரையப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக ஆசியா புத்தக பதிவுகள் விவேக் ஆர்.நாயர், ஜெட்லி புத்தக பதிவுகள் நிறுவனர் ஏ.ஜெட்லீ ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
ஓவியம் வரையும் நிகழ்ச்சிகள் அனைத்தும் கின்னஸ் சாதனைக்குரிய வழிகாட்டுதல்களின் படி நடைபெற்றது. கின்னஸ் சாதனைக்காக பரிந்துரை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் எம்.புதியபாஸ்கர், பசுமை இந்தியா உலக சாதனையாளர் ஏ.சூசைராஜ், மேலநீலிதநல்லூர் பி.எம்.டிகல்லூரி உதவி பேராசிரியர் அனிதா அருள், ரோட்டரி உதவிஆளுநர் மாரிமுத்து,குற்றாலம் ரோட்டரிசங்க அட்வைசர் திருப்பதி, உதவி ஆளுநர் தேர்வு ஜி.மாடசாமி, குற்றாலம் ரோட்டரி எலைட் தலைவர் கனகசபை, செயலர் ராமகிருஷ்ணன், ஓவியமாஸ்டர் ரஞ்சித்குமார், எஸ்.ஏ.வி.பாலகிருஷ்ணா பள்ளிகளின் தாளாளர் திவாகரன், செயின்ட்ஜோசப் கல்லூரி செயலர் போஸ்குணசீலன், ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
பரதாலயா கல்சுரல் அகாதெமி நிர்வாக இயக்குநர் செல்வவிநாயகம் வரவேற்றார். இயக்குநர் ஜி.கல்பனா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாட்டியாலா சரக்கு ரயில் பாதை வெடி வைத்து தகர்க்க முயற்சி: மேலும் ஒருவர் கைது

ஸ்வாகதா தன் போராட்டத்தில் வெல்லட்டும்: ஜேம்ஸ் வசந்தன்

ஃபினிஷர் ரோல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது: அஷுத்தோஷ் சர்மா
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

