"மனிதனின் போக்கால் சந்தைப் பொருளாதாரம் வெற்றி பெறுவதில்லை'
மனிதனின் போக்கால் சந்தைப் பொருளாதாரம் வெற்றி பெறுவதில்லை என சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் எல். வெங்கடாசலம் குறிப்பிட்டார்.
மனிதனின் போக்கால் சந்தைப் பொருளாதாரம் வெற்றி பெறுவதில்லை என சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் எல். வெங்கடாசலம் குறிப்பிட்டார்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பொருளியல் துறை சார்பில் "நடத்தை பொருளாதாரவியலும் சமீபகால மாற்றங்களும்' என்ற தலைப்பில் புதன்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வி. பிரிட்டோ தலைமை வகித்தார்.
கருத்தரங்கில், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் எல். வெங்கடாசலம் பேசியது: உலக அளவில் பொருளாதார நடவடிக்கையில் சந்தைப் பொருளாதாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. தொன்மை பொருளாதார வல்லுநர்கள், சந்தைப்படுத்துவதில் அரசின் தலையீடு இருப்பதால் சந்தைப் பொருளாதாரம் வெற்றியைத் தருவதில்லை எனக் கருதுகின்றனர். மக்கள் எல்லாப் பொருளாதார நடவடிக்கையையும் எடுப்பதில்லை. காரணம், ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஓர் இலக்கு அடிப்படையில் முடிவுகளை எடுப்பதால் சந்தைப் பொருளாதாரம் தோல்வியில் முடிகிறது.
தனக்குத் தேவையான பொருள்களை, சந்தையைப் பார்த்து வாங்காமல், கவர்ச்சியான விளம்பரம், சக மனிதனின் நடவடிக்கையைப் பார்த்து வாங்குவதாலும், சந்தைப் பொருளாதாரம் வெற்றியைத் தருவதில்லை என்று குறிப்பிட்டார்.
துறைத் தலைவர் தார்சியுஸ் ஆல்பின் கருத்தரங்கின் நோக்கம் குறித்துப் பேசினார். கல்லூரிச் செயலர் ஏ. அந்தோணிசாமி வாழ்த்திப் பேசினார். இதில், துறைப் பேராசிரியர்கள் தேவராஜ், அமலநாதன், அந்தோணிராஜ், அல்போன்சா, சரவணன், தூய சவேரியார் கல்லூரி, ம.தி.தா. இந்துக் கல்லூரி, தூய யோவான் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மாணவி எம். சண்முகப்பிரியா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மாணவி எஸ். ஆவுடையம்மாள் வரவேற்றார். மாணவி யூ. வள்ளி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


