திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், 100 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் பேசியது: சிறுபான்மையினருக்கு நலத் திட்டங்கள் சென்றடைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்போது 35 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையாக தலா ரூ.3000 என மொத்தம் ரூ.1.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 60 ஏழை, எளிய இஸ்லாமியர்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உலமா நலவாரியம் மூலம் இயற்கை மரண ஈமச்சடங்கு உதவித்தொகையாக ஒருவருக்கு ரூ.17 ஆயிரமும், 8 உலமா நியமன உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
சிறுபான்மையின மக்கள் தொழில்புரிவதற்கு வங்கிகள் மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மகளிர் திட்டம் மூலம் இலவச தையல் பயிற்சி, அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி போன்ற சிறு தொழில் தொடங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மாரிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், மாவட்ட சிறுபான்மையின கருத்தாளர் சிப்சன், இஸ்லாமிய மகளிர் சங்க கெளரவச் செயலர் செய்யது அகமது, தனி வட்டாட்சியர் பிரின்சிலி அருண்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விசிக மாநாட்டில் நெரிசல்! உரையை சுருக்கமாக முடித்த திருமாவளவன்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 17 - நேரலை!

என்டிஏ நடத்தும் தேர்வுகளில் தொடர் முறைகேடு! 50 பணியாளர்கள் நீக்கம்!

வினா - விடை வங்கி... மனிதர்களின் பரிணாம வளர்ச்சி!
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |


