கடையம் அருகே மேட்டூர் கிராமத்தில் திங்கள்கிழமை பாயச பண்டிகை கொண்டாடினர்.
கடையம் அருகே உள்ள மேட்டூர் சி.எஸ்.ஐ. பரிசுத்த திரித்துவ ஆலயத்தில், கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முதல் நாள் பாயச பண்டிகை என்ற வழிபாட்டை இளைஞர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். மேட்டூர் பகுதியில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு காலரா போன்ற கொடிய நோய் தாக்கி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டதாம். இதையடுத்து, மேட்டூர் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களிடமும் அரிசி, வெல்லம் போன்ற பொருள்களை யாசகம் பெற்று பாயசம் தயாரித்து அனைவருக்கும் வழங்குவதாக நேர்ந்துகொண்டனராம். நோய் குணமானதையடுத்து, வீடுவீடாகச் சென்று பொருள்களை சேகரித்து, இளைஞர்கள் குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து பாயசம் தயார் செய்து வழங்கினராம். ஒவ்வொரு ஆண்டும் பாயசம் செய்து வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நிகழாண்டும் பாயச திருவிழாவை சேகர குரு பண்ணன் சாலமோன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஆண்கள் தண்ணீர் சுமந்தும், அனைவரிடமும் பாயச பொருள்கள் யாசகம் பெற்றும் வந்தனர். தொடர்ந்து, திங்கள்கிழமை மாலை பாயசம் தயார் செய்து அனைவருக்கும் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.65.98 கோடியில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலம் ஆய்வு

ஓமன் அருகே சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: 3 இந்திய மாலுமிகள் மாயம்

தென்னாப்பிரிக்கா: குடியிருப்புப் பகுதியில் மா்ம கும்பல் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு






