முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 15 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: ஆட்சியர் வழங்கினார்

திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 15 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கினார்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:59 am IST

திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 15 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களிடம் துணிப் பையை பயன்படுத்துவது குறித்தும், பிளாஸ்டிக் பையை தவிர்ப்பது குறித்தும் ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இக்கூட்டத்தில், பாளையங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 15 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை ஆட்சியர் வழங்கினார். மேலும், பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் மாறன், உதவி ஆணையர் (கலால்) பழனிக்குமார், பாளையங்கோட்டை வட்டாட்சியர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.