புளியங்குடியில் தொழிலாளி கொலை: 11 மாதங்களுக்குப் பின் 5 பேர் சிக்கினர்

புளியங்குடியில் கட்டடத் தொழிலாளி கொலை தொடர்பாக, 11 மாதங்களுக்குப் பின்  5 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Updated on
1 min read

புளியங்குடியில் கட்டடத் தொழிலாளி கொலை தொடர்பாக, 11 மாதங்களுக்குப் பின்  5 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புளியங்குடி கனகவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமர்(27). கட்டடத் தொழிலாளி.இவரை, கடந்த 2017 மார்ச்சில் சிலர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கட்டடவேலை இருப்பதாக அழைத்துச் சென்று, நாராயணப்பேரி குளத்தில் வைத்து தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக அப்போதைய புளியங்குடி காவல் ஆய்வாளர் ரகுராஜன் வழக்குப்பதிந்து விசாரணை செய்தார். வெகுநாள்களாகியும் துப்பு துலங்காத நிலையில், தற்போதைய  காவல் ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், பெண்ணுடன் தொடர்பு  ஏற்பட்ட விவகாரத்தில்  ராமர் கொலை செய்யப்பட்டது  தெரிய வந்ததாம். இதுதொடர்பாக புளியங்குடி சிந்தாமணியைச் சேர்ந்த நாராயணன்(35), வினோத் சரவணக்குமார்(30), கார்த்திகேயன்(18) உள்ளிட்ட 5 பேரை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். அதில், 9 பேர் சேர்ந்து ராமரை கொலை செய்தது தெரியவந்ததாம். இதில், தலைமறைவான 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் 11 மாதங்களுக்குப் பின் துப்பு துலங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com