மேலப்பாளையத்தில் தமுமுக பொதுக்கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் முத்தலாக் தடைச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலப்பாளையம் பஜார் திடலில் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் முத்தலாக் தடைச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலப்பாளையம் பஜார் திடலில் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கே.எஸ்.ரசூல்மைதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே.சேக்முகைதீன் வரவேற்றார். பொருளாளர் எஸ்.சுல்தான், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கே.அப்பாஸ்ஹில்மி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேசியது: நாட்டில் இஸ்லாமிய பெண்கள் துன்புறுத்தப்படுவதாகவும், கொடுமைக்கு உள்ளாவதாகவும் பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறான பிரசாரத்தை செய்து வருகிறது. முத்தலாக் சட்டத்திற்கு பின்னால் சதித்திட்டம் உள்ளது. இஸ்லாமியத்தில், பெண்களுக்கு முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி கற்பது அவர்களது உரிமை மட்டும் அல்ல; அவர்களது கடமை எனக் கூறப்பட்டுள்ளது. சம உரிமை, சம வேலைக்கு சம ஊதியம் என்ற நம்பிக்கையை பெண்களுக்கு கொடுத்துள்ளது என்றார் அவர்.
இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், தமுமுக மாநிலச் செயலர் எஸ்.மைதீன் சேட்கான், மாவட்டத் தலைவர்கள் ஐ.உஸ்மான்கான், ஏ.நயினார் முகம்மது, முன்னாள் மாவட்டத் தலைவர் பாரூக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...