மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இன்று மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினம்: கட்சிகள் சார்பில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு

மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெறுகிறது.

Updated On :23 ஜூலை 2018, 8:06 am IST

மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெறுகிறது.
கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் திருநெல்வேலியில் 23.7.1999 இல் பேரணி நடத்தியபோது ஏற்பட்ட கலவரத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 23 ஆம் தேதி புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பின் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 
இந்த ஆண்டு கட்சிகள் உள்பட மொத்தம் 30 அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்த காவல்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றில் கொக்கிரகுளம் பாலம் அருகில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்துகின்றனர்.
ஐ.ஜி. ஆய்வு: தற்போது கொக்கிரகுளம் பாலம் அருகில் மற்றொரு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், ஆற்றங்கரையில் காவல் துறை சார்பில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், மாநகர காவல் ஆணையர் மகேந்திரகுமார் ரத்தோட், மாநகர காவல் துணை ஆணையர் சுகுணாசிங், உதவி ஆணையர் நாகசங்கர் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர். 
அஞ்சலி நிகழ்ச்சியையொட்டி, திருநெல்வேலி மாநகரில் திங்கள்கிழமை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையில் இருந்து வண்ணார்பேட்டை வழியாக சந்திப்பு செல்லும் வாகனங்கள் புறவழிச்சாலை, உடையார்பட்டி வழியாக செல்லும் வகையிலும், சந்திப்பில் இருந்து பாளையங்கோட்டை செல்லும் வாகனங்கள் உடையார்பட்டி வழியாக வந்து செல்லும் வகையிலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.