திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 45 பயனாளிகளுக்கு ரூ.33.56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, கடல் கடந்த இந்தியர் இறப்பிற்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ராதாபுரம், கண்ணன்குளத்தைச் சேர்ந்த நாகராஜ் மனைவி தமிழ்ச்செல்வியிடம் ரூ.1,91,594-க்கான காசோலையையும், கடையநல்லூர், இடைகாலைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி சுப்புலட்சுமியிடம் ரூ.9,57,257-க்கான காசோலையையும் ஆட்சியர் வழங்கினார்.
இதேபோல், பாளையங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 20 பயனாளிகளுக்கு தலா ரூ.32,400 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாவையும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், தலா ரூ.25
ஆயிரம் வீதம் 3 பயனாளிகளுக்கு நோயாளர் நிதியுதவி, ஒரு பயனாளிக்கு ரூ.5 ஆயிரத்திற்கான நிதியுதவி, பழங்குடியினர் நல வாரிய அட்டை மூலம் முதியோர் ஓய்வூதியத் தொகையாக 2 பேருக்கு தலா ரூ.12,000, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பயனாளிக்கு தீருதவி உதவித் தொகை ரூ.75 ஆயிரம், சேரன்மகாதேவி வட்டத்தைச் சார்ந்த 11 பயனாளிகளுக்கு தலா 2 சென்ட் வீதம் ரூ.13.20 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா என மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.33.56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
மேலும், பல்வேறு கோரிக்கை மனுக்களை மக்களிடம் பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், திருநெல்வேலி கோட்டாட்யர் மைதிலி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் விஜயகுமார், உதவி ஆணையர் (கலால்) பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.