இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வுக் குறும்படம் திங்கள்கிழமை ஒளிபரப்பப்பட்டது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் இளைஞர்களுக்கு இலவசமாக திறன் வளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்பட 13 அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள், ஆட்டோ மொபைல், கட்டுமானம், தகவல் தொழில்நுட்பத் துறை உள்பட 21 துறைகளில் இப்பணியை செய்து வருகின்றன.
இப்பயிற்சியைக் கண்காணிக்கவும், மேம்படுத்துவும் ஆட்சியர் தலைமையில் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இளைஞர்கள் அதிகளவில் வேலைவாய்ப்பை பெறும் வகையில் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று செய்திமக்கள் தொடர்புத்துறை சார்பில் எல்இடி வாகனத்தில் விழிப்புணர்வு குறும்படத்தை ஒளிபரப்பி பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில்இந்த விழிப்புணர்வு குறும்பட ஒளிபரப்பை ஆட்சியர் சந்தீப் நந்தூரி திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம், வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) மரிய சகாய அந்தோணி, பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வா. வேல் முருகன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சண்முகவேல், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்! வானதி சீனிவாசன் சிறப்பு நேர்காணல்

தலைமுறைகளைக் கடந்த குடும்ப நட்புக்காக பிரசாரம்!

தொகுதி அலசல்...திருவள்ளூர்: தக்கவைக்க முயலும் திமுக; கைப்பற்ற முனையும் அதிமுக !

பேரவைத் தோ்தல்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செயலி மூலம் செய்ய ஏற்பாடு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

