கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேங்காய் விலை தொடர்ந்து உச்சம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தேங்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

News image
Updated On :14 மே 2018, 10:19 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் தேங்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் தேங்காய் உற்பத்தி தன்னிறைவு நிலையில் உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இருப்பினும் வறட்சி, புதிய மரங்கள் சாகுபடி செய்யாமை போன்ற காரணங்களால் கடந்த மூன்று ஆண்டுகளாக தேங்காய் உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ளது. சில்லறை விற்பனையைக் காட்டிலும், எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுப்பவே விவசாயிகள் விரும்புவதால் கேரள பகுதிகளில் இருந்தே அதிகளவில் தேங்காய் திருநெல்வேலி மாவட்டத்திற்கு இறக்குமதியாகி வருகிறது. இதனால், தேங்காய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. திருநெல்வேலியில் ஒரு கிலோ தேங்காய் ரூ.45 முதல் ரூ.50 வரை கடந்த மூன்று மாதங்களாக விற்பனையாகி வருகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கோடைக்காலத்தில் தேங்காய் விலை வழக்கமாக குறையும். ஆனால், தேவைக்கேற்ப வரத்து இல்லாததால் விலை குறையாமல் உள்ளது. இதுதவிர ஒரு மூட்டை தேங்காய் எடுத்தால் 10 தேங்காய் வரை அழுகிவிடுகிறது. வைகாசி மாதத்தில் முகூர்த்த நாள்கள் அதிகம் வரும் என்பதால் இப்போதைக்கு தேங்காய் விலை குறைய வாய்ப்பில்லை என்றனர்.
திருநெல்வேலி உழவர் சந்தையில் காய்கனிகளின் திங்கள்கிழமை விலைநிலவரம் (ஒரு கிலோவுக்கு): கத்தரி-ரூ.24, வெண்டைக்காய்-18, தக்காளி-18, அவரைக்காய்-44, கொத்தவரை-14, புடலங்காய்-16, பாகற்காய்-20, பீர்க்கங்காய்-24, சுரைக்காய்-10, தடியங்காய்-9, பூசணிக்காய்-9, தேங்காய்-44, மாங்காய்-20, மிளகாய்-24, முள்ளங்கி-16, எலுமிச்சை 75, நார்த்தை-24, தண்டுக்கீரை-10, அரைக்கீரை-10, குத்துப்பசலைகீரை-10, மணத்தக்காளிகீரை-20, கொத்தமல்லி கீரை-80, கேரட்-28, பீட்ரூட்-20, உருளைக்கிழங்கு-28, செளசெள-20, ரிங் பீன்ஸ்-76, இஞ்சி-90, நெல்லிக்காய்-50.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.