மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பேட்டையில் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

திருநெல்வேலி பேட்டையில் சட்ட விரோதமாக மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சியதாக 2 வீடுகளில் குடிநீர் இணைப்புகள் திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டன.

Updated On :14 மே 2018, 10:20 pm

திருநெல்வேலி பேட்டையில் சட்ட விரோதமாக மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சியதாக 2 வீடுகளில் குடிநீர் இணைப்புகள் திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகளுக்கு வந்த புகார்களின் அடிப்படையில், வார்டு வாரியாக குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்மோட்டார்கள் பொருத்தி தண்ணீர்உறிஞ்சப்படுவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையொட்டி, திருநெல்வேலி மண்டலம் பேட்டையில் வார்டு 49 எம்.ஜி.பி. தெரு பகுதியில் உதவி செயற்பொறியாளர் டி. சாமுவேல் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்போது 2 வீடுகளில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்து வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த வீடுகளில் இருந்து மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.