திருநெல்வேலியில் தாமிரவருணி புஷ்கரம் குழு சார்பில் நதிக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தாமிரவருணி மஹா புஷ்கரம் குழு சார்பில், நதி குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவும், ஒவ்வொரு பௌர்ணமி தினத்தில் நதிக்கரையில் படித்துறையில் மங்கள ஆரத்தி வழிபாடு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. திருநெல்வேலி கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தை சுற்றிலும் மரக்கன்று நடும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சி.எஸ். குமார் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். பாஜக மாநில இளைஞரணிச் செயலர் வேல். ஆறுமுகம், திருநெல்வேலி மாவட்டப் பொதுச்செயலர் ஆ. மகராஜன், மாவட்ட துணைத் தலைவர் சீதா, எஸ்.சி., எஸ்.டி. அணி நிர்வாகி முருகதாஸ், ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழு நிர்வாகிகள் குணதுரை, சரவணன், கைலாசநாதர் சுவாமி பக்தர்கள் பேரவையைச் சேர்ந்த பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர். 21 மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து நதிக்கரையில் பாபநாசத்தில் இருந்து புன்னக்காயல் வரை மரக்கன்றுகள் நடப்படும் என இக்குழுவினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


