ஹீமோ பீலியா குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு இம் மாதம் 17, 18 ஆம் தேதிகளில் பாளையங்கோட்டையில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக ஹீமோபீலியா சங்கத்தின் திருநெல்வேலி கிளைச் செயலரும், மருத்துவருமான ஆர்.அன்புராஜன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
ஹீமோபீலியா என்பது மனித உடலில் ரத்தம் உறையாமல் போகும் நோயாகும். அடிபட்ட இடத்தில் அதிகபட்சமாக 5 முதல் 10 நிமிடத்திற்குள் ரத்தம் உறைவது இயற்கை. ஆனால், ஹீமோபீலியா இருந்தால் ரத்தம் உறையாது. இந்நோயை முற்றிலும் குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டறியப்படவில்லை. உலகில் 5 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்நோய் உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 1700 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 260 பேரும் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மரபணுக் குறைபாடு காரணமாக உருவாகும் இந்த நோயால் ரத்தத்தை உறைய செய்யும் பிளாஸ்மா எனும் ரத்த நீர்ம காரணிகளின் செயல்பாடு குன்றுகிறது. ஹீமோபீலியாவை சில அறிகுறிகள் மூலம் நாம் அறிய முடியும். பிறந்த குழந்தைக்கு தொப்புள் கொடியிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்.
குழந்தை தவழும் போது அல்லது நடக்க துவங்கும்போது மூட்டுகள் மற்றும் தசைகளில் ரத்த போக்கு ஏற்படும். உடல் வீக்கத்தோடு ஊதா நிறத்தில் கன்றி போயும் அல்லது கன்றி போகாமலும் இருக்கும். மூட்டு அல்லது தசைகள் வீக்கம் தன்னிச்சையாக ஏற்படும். சில வேளைகளில் மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்.
சர்வதேச அளவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவிகிதம் பேர் மரணத்தையும், 70 சதவிகிதம் பேர் மாற்றுத்திறனாளிகளாகவும் உள்ளனர். ஹீமோபிலியாவை முற்றிலும் குணப்படுத்த முடியாவிட்டாலும், சரியான சிகிச்சை, மருத்துவர் வழிகாட்டுதல்கள், ஆலோசனை, சரியான பராமரிப்பு மூலம் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். ஹிமோபீலியா உறைக்காரணி என்று அழைக்கப்படும் நரம்பு வழி ஊசி மூலம் செலுத்தும் மருந்து மூலம் சிகிச்சை பெற முடியும்.
ஹீமோபீலியா விழிப்புணர்வுக் கருத்தரங்கு பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இம் மாதம் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் ஆலோசனைகளும், சுயசிகிச்சைக்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்படும் என்றார் அவர். பேட்டியின்போது, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் மு.முகம்மது சாதிக், தமிழ்த் துறைத் தலைவர் ச.மகாதேவன், ஹாரிஸ்டெக்சன், பிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

