மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கம்பன் கழகத்தின் 455ஆவது தொடர் சொற்பொழிவு

நெல்லை கம்பன் கழகத்தின் 455ஆவது கம்ப ராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு ராமசாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

Updated On :22 அக்டோபர் 2018, 2:57 am

நெல்லை கம்பன் கழகத்தின் 455ஆவது கம்ப ராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு ராமசாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
முனைவர் ச.கண்ணபிரான் தலைமை வகித்தார். வெ. குமரகுருபரன் இறைவணக்கம் பாடினார். கம்பர் அனுபூதி என்ற தலைப்பில் மருத்துவர் இளங்கோவன் செல்லப்பாவும்,  யுத்த காண்டம் என்ற தலைப்பில் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ. சத்தியமூர்த்தியும் சொற்பொழிவாற்றினர். முனைவர் பாண்டியன், சேதுமாதவன், நாகராஜன், தங்கமாரியப்பன், பேராச்சிமுத்து, வெங்கிடாசலபதி, வேலாயுதம், சங்கரன், ஜெயா, அன்னலட்சுமி உள்பட 60-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பே. சங்கரபாண்டியன் வரவேற்றார். கழகச் செயலர் கவிஞர் பொன். வேலுமயில் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.