தமிழகத்தின் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் வீழ்த்த வேண்டும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சஞ்சய் தத்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓபிசி பிரிவு தென்மண்டல கலந்துரையாடல் கூட்டம் திருநெல்வேலி வண்ணார்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த சஞ்சய் தத் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
கஜா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது இங்கு வந்து பார்வையிட பிரதமர் மோடிக்கு நேரம் இல்லை. இது மக்கள் மீது அவருக்கு அக்கறையில்லை என்பதைக் காட்டுகிறது. அதுபோல, பொருளாதாரத்திற்கும் மோடி எதிரியாகவே செயல்பட்டார். பணமதிப்பிழப்பு கொள்கையால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை பெருகி காணப்படுகிறது. தவறான வழியில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பாலும் பல சிறு, குறு தொழில்கள் அழிக்கப்பட்டன.
தமிழக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய நேரம் இது. தமிழகத்தின் எதிரிகளாகச் செயல்படும் அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் வீழ்த்த வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் திமுக -காங்கிரஸ் கூட்டணியை 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றி பெறச் செய்வர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
நிவாரண நிதியை அதிகரிக்க வேண்டும்: சங்கரன்கோவில் அருகே வரகனூர் கிராமத்துக்குச் சென்று பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம். வெடிவிபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மாநில அரசு வழங்கியுள்ளது. இதுபோதுமானதாக இல்லை. எனவே, அரசு சார்பிலும், பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பிலும் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். இனி வருங்காலங்களில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்துக்கு தமிழ்நாடு ஓபிசி பிரிவு மாநிலத் தலைவர் டி.ஏ.நவீன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் டி.காமராஜ் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் டியுக் துரைராஜ் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சஞ்சய் தத் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர்கள் ஹெச்.வசந்தகுமார், ஜெயக்குமார், மயூரா ஜெயக்குமார், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், மேற்கு மாவட்டத் தலைவர் பழனி உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


