தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சிறப்பு நிதியுதவி: அனைத்து வார்டுகளிலும் விண்ணப்பம் சேகரிப்பு மையம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள சிறப்பு

Updated On :25 பிப்ரவரி 2019, 9:55 am IST

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள சிறப்பு நிதியுதவிக்காக அனைத்து வார்டுகளிலும் விண்ணப்பம் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் வி.நாராயணன் நாயர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  வறுமைக் கோட்டிற்கான விண்ணப்பப் படிவத்தை w‌w‌w.‌t‌n‌r‌d.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளத்தில்  இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.  4  பக்கங்கள் கொண்ட அந்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து மாநகராட்சிப் பகுதிகளில் அந்தந்த வார்டுகளில் உள்ள விண்ணப்பம் சேகரிப்பு மையத்தில் ஒப்படைத்து அதற்கு  ஒப்புகைச் சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.  
இதற்காக மாநகராட்சி ஆணையர் வி.நாராணயன் நாயர்  உத்தரவின் பேரில் ஒவ்வொரு  வார்டு பகுதியிலும் இரண்டு முதல் நான்கு விண்ணப்பம் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் விண்ணப்பப் படிவத்துடன் எவ்வித ஆவணங்களையும் இணைக்கத் தேவையில்லை. பொதுமக்கள் விண்ணப்பப் படிவத்தில் குடும்பத் தலைவி பெயர்,  வயது,  முகவரி,  குடும்ப அடையாள அட்டை எண், குடும்பத் தலைவி ஆதார் எண் அல்லது ஆதார் சேர்க்கைக்காக வழங்கப்பட்ட எண்,   குடும்பத் தலைவி நலவாரிய உறுப்பினராக இருப்பின் அதற்கான அடையாள அட்டை எண்,  சொந்த குத்தகையாக நிலம் ஏதும் இருப்பின் அதற்கான சர்வே எண்,  பரப்பளவு உள்ளிட்டவற்றின் விவரத்தைக் குறிப்பிட வேண்டும்.  குடும்ப உறுப்பினர் விவரங்களை கவனத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும்.
பான் கார்டு எண் இருப்பின் அந்த எண்ணையும் குறிப்பிட வேண்டும். குடும்பத்தில் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்ட பயனாளி யாரேனும் இருப்பின் அந்த அடையாள அட்டை எண்ணையும் தெரிவிக்க வேண்டும். குடும்பத்தில் மாற்றுத்திறனாளி இருப்பின் அதன் விவரம்,  அடையாள அட்டை எண்,  அரசு உதவித்தொகை பெற்ற விவரம் ஆகியவற்றை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.
பொது மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பப் படிவங்கள் கணினியில் ஏற்றப்பட்டு அதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு நிதியுதவி வழங்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.