திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

பாளை.யில் பெண்களிடம் நகை பறிப்பு

பாளையங்கோட்டையில் இரு இடங்களில் பெண்களிடம் நகைகளை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :24 ஜனவரி 2019, 2:50 am IST

பாளையங்கோட்டையில் இரு இடங்களில் பெண்களிடம் நகைகளை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வி.எம்.சத்திரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் இந்திரா ராணி,  ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் தனது வீட்டின் அருகே புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்த போது,  அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இந்திரா ராணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினராம்.
பாளையங்கோட்டை திருமால்நகர் அருகேயுள்ள மயன் நகரைச் சேர்ந்தவர் ரேவதி (38). இவர், சம்பவத்தன்று துணி வாங்குவதற்காக  மொபட்டில் ரெட்டியார்பட்டி திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ரேவதி கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்கசங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினராம்.
இதே போல பாளையங்கோட்டை அருகே ஆசிரியர் காலனியில் உள்ள இரு வீடுகளை உடைத்து மொத்தம் ரூ.24 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் எடுத்துச் சென்றனராம். இந்த புகார்கள் குறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.