பாளையங்கோட்டையில் இரு இடங்களில் பெண்களிடம் நகைகளை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வி.எம்.சத்திரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் இந்திரா ராணி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் தனது வீட்டின் அருகே புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இந்திரா ராணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினராம்.
பாளையங்கோட்டை திருமால்நகர் அருகேயுள்ள மயன் நகரைச் சேர்ந்தவர் ரேவதி (38). இவர், சம்பவத்தன்று துணி வாங்குவதற்காக மொபட்டில் ரெட்டியார்பட்டி திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ரேவதி கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்கசங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினராம்.
இதே போல பாளையங்கோட்டை அருகே ஆசிரியர் காலனியில் உள்ள இரு வீடுகளை உடைத்து மொத்தம் ரூ.24 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் எடுத்துச் சென்றனராம். இந்த புகார்கள் குறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


