பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

சங்கரன்கோவில் அருகே மாமனார் கத்தியால் குத்தி கொலை: மருமகன் கைது

சங்கரன்கோவில் அருகே அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த மருமகனைத் தட்டிக் கேட்ட மாமனார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மருமகனைப் போலீசார் கைது செய்தனர்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2020, 11:59 am

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த மருமகனைத் தட்டிக் கேட்ட மாமனார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மருமகனைப் போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள மைப்பாறையைச் சேர்ந்தவர் அய்யனார்(60). இவரது மகள் சஞ்சிதா முகநூல் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் கரூர் அருகேயுள்ள புலவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது. செல்வக்குமார் தனது மனைவி, குழந்தையுடன் மாமனார் அய்யனார் வீட்டில் தங்கி கிடைத்த வேலையைச் செய்து வந்தார். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்வாராம்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு செல்வக்குமார் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது அய்யனார் தட்டிக்கேட்டாராம். இதனால் அய்யனாருக்கும், செல்வக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த செல்வக்குமார் கத்தியால் அய்யனாரை குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அய்யனார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்ததும் திருவேங்கடம் போலீசார் விரைந்து சென்று அய்யனார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக செல்வக்குமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.