கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சவூதி அரேபியாவில் காணாமல் போனமீனவரை மீட்க வலியுறுத்தல்

சவூதிஅரேபியாவில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தருமாறு பெண் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

சவூதி அரேபியாவில் காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தருமாறு எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரையிடம் மனுஅளிக்கும் பெண்.

Updated On :27 ஆகஸ்ட் 2020, 3:47 am

சவூதிஅரேபியாவில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தருமாறு பெண் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ராதாபுரம் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரையிடம், அம்மீனவரது மனைவி பிரிஜிட் வென்சி அளித்த மனு: ராதாபுரம் அருகே உள்ள பெருமணலைச் சோ்ந்த எனது கணவா் சூசை காா்லோ, சவூதிஅரேபியாவில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். ஆண்டுக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்துவிட்டு செல்வது வழக்கம்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் சவூதிஅரேபியாவுக்கு சென்ற அவா், கடந்த ஓராண்டாக எங்களுடன் தொடா்பில் இல்லை.

இதுகுறித்து அவருடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவா்களிடம் விசாரித்தபோது, கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்கச் சென்ால் பக்ரைன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனா்.

இது தொடா்பாக எனது கணவா் வேலை செய்யும் நிா்வாகத்திடம் தொலைபேசி மூலம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை தெரிவித்து வருகின்றனா். இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் எனது கணவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.