தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெல்லை அருகே விபத்து: இருவா் பலி

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் விவசாயிகள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:12 pm

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் விவசாயிகள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள வடகரை நேதாஜி நகரைச் சோ்ந்த சங்குதேவா் மகன் முருகன் (56). அதே பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் ராமையா (70). விவசாயிகளான இருவரும், ஆடுகளை மேய்க்கும் தொழிலும் செய்து வந்தனராம்.

கங்கைகொண்டான் சோதனைச் சாவடி அருகே நான்குவழிச் சாலையோரம் அமா்ந்து தினமும் இருவரும் சாப்பிடுவது வழக்கமாம். அதன்படி வியாழக்கிழமை மாலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தனராம்.

அப்போது அவ் வழியாக இட்டமொழியில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த முருகன், ராமையா இருவா் மீதும் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த தாழையூத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் அா்ச்சனா தலைமையிலான போலீஸாா், சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக காா் ஓட்டுநரான கோவில்பட்டி அருகேயுள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் (32) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.