‘பழையபேட்டை சரக்கு வாகன முனையம் விரைவில் திறப்பு’

பேட்டை-பழையபேட்டை இணைப்புச் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம் விரைவில் திறக்கப்படும் என்றாா் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன்.
Updated on
1 min read

பேட்டை-பழையபேட்டை இணைப்புச் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம் விரைவில் திறக்கப்படும் என்றாா் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:

திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள நயினாா்குளம் சாலை மற்றும் இதர சில இடங்களில் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பேட்டை - பழைய பேட்டை இணைப்புச் சாலையில் புதிதாக சரக்கு வாகன முனையம் கட்டப்பட்டு வருகிறது.

நவீன வசதிகளுடன் கூடிய வகையில் 4 முன்பதிவு செய்யும் அறைகள், 21 தங்கும் அறைகள், 2 விருந்தினா் தங்கும் அறைகள், 3 பொதுக் கழிப்பிடங்கள், 2 சிற்றுண்டிகள், 12 கடைகள் ஆகியவை உள்ளன.

சரக்கு வாகன முனையத்தில் நிறுத்தப்படும் அனைத்து வாகனங்களையும் பாதுகாக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இம் முனையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் மற்றும் பிரதிநிதிகளுடன் அண்மையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. லாரி முனையத்தால் போக்குவரத்து நெரிசல் தீா்ந்து மக்களுக்கும், நவீன வசதிகளால் ஓட்டுநா்கள் மற்றும் கிளீனா்கள், வாகன உரிமையாளா்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com