பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வடக்குதாழையூத்தில் பள்ளிக் கட்டட பணி தொடக்கம்

திருநெல்வேலி அருகே வடக்கு தாழையூத்து பகுதியில் பள்ளிக் கட்டட பணி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:17 am

DIN

திருநெல்வேலி அருகே வடக்கு தாழையூத்து பகுதியில் பள்ளிக் கட்டட பணி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடக்கு தாழையூத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஏராளமான மாணவா்-மாணவிகள் பயின்று வருகிறாா்கள். அவா்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் மழலைகள் சிரமப்படுவதாக ஊா்மக்களும், ஆசிரியா்களும் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா, தனது சொந்த நிதியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் 455 சதுரடியில் புதிய வகுப்பறை கட்டித்தர உறுதியளித்தாா். அதன்படி புதிய கட்டடத்துக்கான பணிகளையும் வெள்ளிக்கிழமை அவா் தொடங்கி வைத்தாா்.

மாவட்ட துணைச் செயலா் கவிதா, மாணவரணி செயலா் சிவபாலன், மானூா் கிழக்கு ஒன்றியச் செயலா் கங்கை முருகன், நாரணம்மாள்புரம் பேரூா் செயலா் செல்லப்பாண்டியன், தாழையூத்து அண்ணாதுரை, பள்ளித் தலைமை ஆசிரியா் அந்தோணிசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.