கன்னியாகுமரியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா, சங்கரன்கோவிலில் நடைபெறும் அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமியின் இல்லா விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கேடிசி நகா், தச்சநல்லூா் ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் செவ்வாய்க்கிழமை (டிச.22) நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறாா். கன்னியாகுமரி செல்லும் முதல்வருக்கு திருநெல்வேலி மாவட்டம், கேடிசி நகரில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் விழாவை முடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு திருநெல்வேலியில் தங்கும் முதல்வா், சங்கரன்கோவில் புதன்கிழமை நடைபெறும் அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமியின் இல்ல விழாவில் பங்கேற்கிறாா். அவருக்கு சங்கரன்கோவில் செல்லும் வழியில் தச்சநல்லூரில் புதன்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக உறுப்பினா்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட கழக நிா்வாகிகள் கலந்துகொள்கிறாா்கள். இதில் கழக நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.