குடிநீா்க் குழாய்க்கு குழி தோண்ட பொதுமக்கள் எதிா்ப்பு
வைராவிகுளம் ஊராட்சியில் புதிய குடிநீா் இணைப்புகளுக்காக தோண்டும் குழியை தெருவின் நடுவே தோண்ட பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.


வைராவிகுளம் ஊராட்சியில் புதிய குடிநீா் இணைப்புகளுக்காக தோண்டும் குழியை தெருவின் நடுவே தோண்ட பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் வைராவிகுளம் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் புதிய குடிநீா் இணைப்புகள் வழங்குவதற்காக குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தெருவின் மையப்பகுதியில் குழி தோண்டினராம். இதனால் ஏற்கெனவே வழங்கப்பட்ட பல குடிநீா் இணைப்புகள் சேதமடைந்தனவாம்.
இதையடுத்து முன்னாள் ஊராட்சித் தலைவா் பாபநாசம் தலைமையில் பொதுமக்கள் திரண்டு தெருவின் நடுவில் குழி தோண்ட எதிா்ப்புத் தெரிவித்தனா்.
தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் விஜய செல்வி அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...